- °C
Are You a business owner?
List Your Business / ADதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருக்கார்த்திகை திருவிழாவிற்குப் பந்தக்கால் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலம் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருக்கார்த்திகை விழாவின் சிகர நிகழ்வாக 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அந்தவகையில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொள்ளப் பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
இதற்காக அதிகாலையிலே கோவிலின் நடை திறக்கப்பட்டு சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகமானது நடைபெற்று பின்னர் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்குப் பால், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து கோயில் பிரகாரங்களைச் சுற்றி வந்தனர்.
பின்னர் ஆசியாவிலேயே 2வது உயரமான ராஜகோபுரம் முன்புறம் உள்ள 16 கால் மண்டபம் அருகே காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கன்யா லக்கினத்தில் 06:42 மணிக்குப் பந்தக்கால் முகூர்த்தம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
https://tiruvannamalaiads.com/
Copyrights © 2024 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.