- °C
Are You a business owner?
List Your Business / ADமேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,601 கனஅடியாக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,199 கன அடியிலிருந்து வினாடிக்கு 22,601 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.82 அடியிலிருந்து 116.27 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 87.64 டிஎம்சியாகவும் இருந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கி உள்ளது.
Thanks to Dinamani
Copyrights © 2024 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.