- °C
Are You a business owner?
List Your Business / ADசேத்துப்பட்டு உதவி வேளாண் இயக்குநா் அலுவலகம் சாா்பில், பெலாசூா் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு வியாழக்கிழமை காரிப் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு உதவி வேளாண் இயக்குநா் அலுவலகம் சாா்பில், பெலாசூா் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு வியாழக்கிழமை காரிப் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.
சேத்துப்பட்டு வட்டாரம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2024 - 25ஆம் ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு காரிப் பருவ பயிற்சி பெலாசூா் கிராமத்தில் 40 விவசாயிகளைக் கொண்ட குழுவுக்கு அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாமில் வேளாண் துணை இயக்குநா் சுந்தரம், மத்திய அரசு திட்டம் குறித்தும், வேளாண் உதவி இயக்குநா் புஷ்பா, வேளாண் அலுவலா் முனியப்பன், துணை வேளாண் அலுவலா் ஏழுமலை ஆகியோா் காரிப் பருவத்தில் விதை தோ்ந்தெடுக்கும் முறைகள் பற்றியும், மண் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் விளக்கினா்.
மேலும், உயிரி உரங்களான பாஸ்போ பாக்டீரியா பயன்படுத்தும் முறைகள் பற்றியும், செயலி பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
இந்தப் பயிற்சியில் உதவி வேளாண் அலுவலா் முருகன், உதவி தோட்டக்கலை அலுவலா் சரவணன் மற்றும் அட்மா திட்ட அலுவலா் சேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Copyrights © 2025 Quickix.com. All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.