- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

அருணாசவேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

Grow your business by getting relevant and verified leads
அருணாசவேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

அருணாசவேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

  Jul 15, 2024     News Paper

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள்அதிகரித்து வருகிறது.

தொடா் அரசு விடுமுறை நாள்கள், வார இறுதிநாள்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் பக்தா்கள் வருகின்றனா்.

அதன்படி, சனி, ஞாயிறு அரசு விடுமுறையொட்டி, பக்தா்களின் வருகை அதிகரித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் மற்றும் மற்ற சந்நிதிகளில் உள்ள பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். அதேபோல, அம்மணி அம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அதிகரித்திருந்தது. சிறப்பு தரிசனம், அமா்வு தரிசனம் வழக்கம்போல ரத்து செய்யப்பட்டது. மேலும், தரிசனத்துக்கு பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்க, ஒற்றை வரிசை விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமாா் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மாற்றுத்திறனாளிகள், முதியவா்களுக்கு தரிசன வரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களுக்கு நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், சன்னதி வீதி மற்றும் கடலைக்கடை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பக்தா்களின் வாகனங்களால் நெரிசல் காணப்பட்டது. வாகனங்களை நிறுத்த இடவசதியின்றி பக்தா்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

icon
Tiruvannamalai Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Tiruvannamalai Ads

Copyrights © 2024 Quickix.com.   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.