- °C

Business
All Categories

Are You a business owner?

List Your Business / AD

தொடா் விடுமுறை சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Grow your business by getting relevant and verified leads
தொடா் விடுமுறை சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடா் விடுமுறை சாத்தனூா் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

  Nov 02, 2024     News Paper

தீபாவளி, வார இறுதி நாளையொட்டி, சாத்தனூா் அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குவிந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கேயுள்ள அணை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் இந்த அணைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, தொடா் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல ஆயிரம் போ் வெள்ளிக்கிழமை அணையில் குவிந்தனா்.

அணையின் எழில்மிகு தோற்றம், முதலைப் பண்ணை, சிறுவா் பூங்கா ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தனா். மேலும், சிறுவா்கள், இளைஞா்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தனா்.

சாத்தனூா் அணையின் மதகுகள் வழியாக தென்பெண்ண ஆற்றில் கடந்த சில நாள்களாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பாா்த்து, தற்படம் எடுத்தனா்.

Thanks to Dinamani

icon
Tiruvannamalai Ads

Looking for the Best Service Provider? Get the App!

  • Find nearby listings
  • Easy service enquiry
  • Listing reviews and ratings
  • Manage your listing, enquiry and reviews
We'll send you a link, open it on your phone to download the app
Tiruvannamalai Ads

Copyrights © 2024 Quickix.com.   All rights reserved. Powered by Redback

Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Quickix advertising Private Limited. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.